Monday 7 November 2016

திரௌபதி அம்மன் வழிபாடு

தமிழகத்தின் க்ஷத்ரியர்களான பெரும்பான்மை வன்னிய மக்களால் வணங்கப்படும் பெண்கடவுள் திரௌபதை தேவி ஆவாள் 


வன்னியர்கள் ஷம்பு  மஹரிஷியின் வேள்வியில் தோன்றிய அக்னிகுல க்ஷத்ரியர்களாவார்கள் அக்னியே ஏனைய குலங்களான சூரிய , சந்திர , யது வம்சத்திற்கு  மூலமாகும். வன்னியர்கள் தங்களின் முன்னோர்களாக பாண்டவர்களை கருதுகின்றனர் . கர்நாடக பகுதியில் வசிக்கும் சில வன்னியர்கள் பாண்டவ குலம் என்ற பெயரினைக்கொண்டு தர்மராஜா(தர்மன் ) வழிபாட்டினை காலம் காலமாக செய்து வருகின்றனர் இப்பழக்கம் தமிழகத்தில் உள்ள வன்னியர்களிடமும் உள்ளது .. எனவே துருபதனின் யாகாக்கினியில் உதித்த திரௌபதியை வன்னியர்கள் குலக்கடவுளாகக் கொண்டுள்ளனர்.
Draupadi matha From Yagna



தமிழகத்தில் காணப்படும் பெரும்பான்மையான திரௌபதி ஆலயங்கள் அனைத்தும் வன்னியர்களுக்கு பாத்தியப்பட்டவையாகவே உள்ளது .

எங்கெல்லாம் திரௌபதி ஆலயங்கள் உள்ளதோ அங்கெல்லாம் வன்னியர்கள் பரவலாக காணப்படுகின்றனர் . வன்னிய குல க்ஷத்ரியர்களால் பல திரௌபதி ஆலயங்களில் திருவிழாக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது . இடத்திற்கு ஏற்ப திரௌபதி ஆலயங்களில் உள்ள சிறுதெய்வங்கள் மாறுபடுகின்றன .இதற்கு காரணம் திரௌபதி அம்மன் வன்னியகுல க்ஷத்ரியர்கள் பொதுவான குலக்கடவுளாக இருந்தாலும் ஒவ்வொரு தனிப்பட்ட வன்னியர் குடும்பங்களுக்கும் தனித்தனி குலதெய்வங்கள் உண்டு இவையே அந்தந்த பகுதியை சேர்ந்த திரௌபதி அம்மன் ஆலயங்களில் காணப்படுகின்றது .

மேலும் ஒருபதிவில் விரிவாக திரௌபதி அம்மன் வழிபாட்டையும் அதில் வன்னியர்களின் பங்களிப்பையும் பற்றிக்காண்போம் .........

Thursday 5 May 2016






உவமை கவிஞர்  சுரதா அவர்களால் எழுதப்பட்ட வன்னிய வீரன்  என்னும் குறுங்காவியத்தை  பற்றி தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும் 

                                                     காந்தவராயன் , சேந்தவராயன்


வன்னிய குல கல்யாணப் பாடல் என்னும் வன்னியர்களின் திருமணத்தில் பாடப்படும் பாடலை படிக்க கீழே க்ளிக் செய்யவும் .





கவியரசர் கம்பர் எழுதிய  வன்னியர் சிலையெழுபதுபற்றி தெரிந்து கொள்ள கீழே Click செய்யவும் 


                                                      வன்னியர் சிலையெழுபது

Thursday 14 April 2016

பாண்டிய மன்னர்களின் வம்சாவளியினரான வன்னியர்கள் 


இன்றும் வாழ்ந்து வரும் பாண்டிய மன்னர்களான வன்னிய ஜமீன்கள் 




பாண்டிய மன்னர்களின் வம்சாவளியினரான சிவகிரி, அழகாபுரி ,தென்மலை, ஏழாயிரம் பண்ணை , பண்ணீராயிரம்  பண்ணை , மற்றும் சம்சிகாபுரம் அரசர்கள் பாண்டிய வம்சா வளியினராவர்.  இவர்கள் தற்போதும் வாழ்ந்துவரும் பாண்டிய வன்னியர் குலத்தினர். 











பாண்டிய வம்ச வன்னியர்களைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு click இங்கு செய்யவும் 







ஊடகங்களில்  வந்த  சிவகிரி வன்னியர் ஜமீன் தொடர்பான செய்திகள் 





http://www.dailythanthi.com/article.asp?NewsID=746445&disdate=7%2F23%2F2012


சேர மன்னர்களின் வம்சாவளியினர்  வன்னியர்களே 


சேர மன்னர்களின் வாரிசுகளான 

அரியலூர் மழவராயர்கள்





டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் அரியலூர் மழவராயர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் சங்ககால மழவர்களின் மரபினர்கள் என்றும் அவர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்கள் என்றும் ஒப்பிலா அம்மனை வழிப்படுபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அரியலூர் மழவராயர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க காலம் முதற்கொண்டு கி.பி. 20 ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவதாகவும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்டு பற்பல சான்றுகளையும் கொடுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று :-
"இரண்டாம் மாற வர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1239 - 1251) தனது பத்தாம் ஆட்சியாண்டில், ஐயன் மழவராயன் விருப்பப்படி, திருமாலுகந்தான் கோவில் என்னும் ஊரிலுள்ள ஒப்பிலா முலையார் என்ற அம்மன் கோவிலுக்கு வரியிலியாக நிலங்களை விட்டான் என்று குறிப்பிடுகிறார்"
தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா அவர்கள், அரியலூர் மழவராயர்களைப் பற்றி "வன்னியர்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். கர்னல் மெக்கென்சி சேகரித்த குறிப்புக்களில் "அரியலூர் பாளையக்காரர் கைபீது (கி.பி. 1805)" என்ற கைபீதும் ஒன்றாகும். இக் கைபீது "மாளவராயர் அரியலூர் பாளையக்காரர் ஸம்ஸ்தானம் மதுரை, திருச்சிராப்பள்ளி வகையறா" என்று தொடங்கப்பெற்றிருக்கிறது. ஜாதியில் வன்னிய குலத்தவர்களுடைய வமிசாவளி என்று குறிப்பிடுவதாக தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்ட "ஐயன் மழவராயன்" அவர்கள் இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1239 - 1251) ஆட்சி காலத்தில் மதுரை அழகர் கோயிலுக்கும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் கொடைகள் வழங்கியுள்ளதை கல்வெட்டு சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
அரியலூர் பாளையக்காரர்களின் சமஸ்தானம் "மதுரை திருச்சிராப்பள்ளி வகையறா" என்று கைபீது தெளிவாக குறிப்பிடுவதால், வன்னிய குல க்ஷத்ரியர்களான மழவராயர்கள் சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் மதுரையை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. மேலும் கைபீது "பள்ளிக் கொண்ட ஒப்பிலா மழவராயர்" என்ற அரியலூர் அரசரை குறிப்பிட்டு அவருடைய ஆட்சியாண்டையும் (கி.பி. 1422 - 1457) குறிப்பிடுகிறது.
கி.பி. 1450 ஆம் ஆண்டில் "பள்ளி கொண்ட பெருமாள் மழவராயர்" என்ற அரசர் பட்டுக்கோட்டைப் பகுதிக்குத் தலைவனாயிருந்தான் என்று திருச்சிற்றேமம் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. கி.பி. 1582 ஆம் ஆண்டின் புதுக்கோட்டை செப்பேட்டில் வன்னியர்களான அரியலூர் மழவராயர், பருவூர் கச்சியராயர், பிச்சாவரம் சோழகனார் மற்றும் உடையார்பாளையம் காலாட்கள் தோழ உடையார் குறிப்பிடப்படுகிறார்கள்.
எனவே வன்னிய அரசர்கள் புதுக்கோட்டை பகுதியை கி.பி. 16 ஆம் நூற்றாண்டிலும் அரசாட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. கள்ளர் குல தொண்டைமான்கள் கி.பி. 1686 ஆம் ஆண்டு முதலே (கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம்) புதுக்கோட்டைப் பகுதியை அரசாட்சி செலுத்த தொடங்கினார்கள் என்பது வரலாறாகும்.
அரியலூர் மழவராயர்கள், சோழ மன்னன் வீர ராஜேந்திர சோழனின் (கி.பி. 1070) நன்னிலம் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகிறார்கள் என்று நான் இன்றைய ஆய்வில் கண்டறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அக் கல்வெட்டு :-
"விளை நிலத்துக்கு கிழ்பாற் கெல்லை கன்னரதேவன் மருதமாணிக்க தேவன் நிலத்துக்கு மேற்கும் தென்பாற் கெல்லை அரியலூருடையான் மழவதரையன் நில......."
மேலும் ஒரு நன்னிலம் கல்வெட்டு "பரமேச்சுவர மங்கலத்து அரியலூருடையான்" என்று குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீ வல்லபப் பண்டியனுடையதாகும்.
பாண்டியர்களுடைய பல கல்வெட்டுகளில் "பள்ளிப் பீட மழவராயன்" என்றும் "பள்ளிக் கட்டில் மழவராயன்" என்றும் குறிப்பிடப்படுகிறது. இப் பெயர்கள் என்பது பாண்டிய அரசர்கள் தாங்கள் பயன்படுத்திய "பள்ளிக் கட்டிலாகும்". அதாவது "பாண்டிய அரசர்களது சிம்மாசனமாகும்". அத்தகைய பெருமைமிகு சிம்மாசனத்திற்கு வன்னியர்களான மழவராயர்களது பெயரினை பாண்டியர்கள் வைத்திருக்கிறார்கள் என்பது வன்னியர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகும். இதன் மூலம் "பள்ளி" என்னும் சொல் "வேந்தனை" குறிப்பிடும் சொல்லாக அறியமுடிகிறது.
அரியலூர் மழவராயர்களைப் பற்றி பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காணக்கிடைகின்றன. அவர்கள் பல கோயில்களை எழுப்பியும் கொடைகளை வழங்கியும் வரலாற்றில் புகழ் பெற்றிருக்கிறார்கள். அரியலூரில் கோதண்டராமஸ்வாமி கோயிலில் மழவராயர்கள் கட்டிய "தசவதார மண்டபம்" என்பது தமிழகத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காததாகும்.





நன்றி: திரு.N.முரளி நாயக்கர் 





                                மேலும் விவரங்களுக்கு இங்கு click செய்யவும் 











                              

                              சோழர் வம்சாவளியினர் 



தென்கிழக்கு ஆசியாவையே கட்டியாண்ட சோழ 

மன்னர்களின் வாரிசுகள் வீர வன்னிய குல 

க்ஷத்ரியர்கள் 



இன்று கல்வெட்டுகளில் வரும் சில பட்டங்களை வைத்துக்கொண்டு சில ஜாதியினர் தங்கள் சோழ மன்னர்களின் பரம்பரை எனவும் , வம்சம் எனவும் கூறிக்கொள்கின்றனர். ஆனால் வரலாற்று ஆய்வாளர்களும் , தொல்லியல் துறை அறிஞர்களும் சிதம்பரத்தை அடுத்த பிச்சவரத்தை சேர்ந்த சோழ மன்னர்களே சோழர்களின் உண்மையான வாரிசுகள் என உறுதியாக கூறுகின்றனர்.

எந்த சாதியினர் எத்தனைப் பட்டங்கள் வைத்துக்கொண்டாலும் சோழர்களின் வம்சத்தினர் வன்னியர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கல்வெட்டு ஆதாரங்களும், பட்டயங்களும் வன்னியர்களுக்கு ஆதரவாகவே உள்ளன .

பிச்சாவரம் சோழர்கள் 


வீரவர்ம சோழன், விட்டலேஸ்வர சோழ கோனார், தீவுக் கோட்டை சோழகன் போன்ற சோழ மன்னர்களை "பிச்சாவரம் அரசர்கள்" என்று சான்றுகள் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. இவர்கள் பொதுவாக "தீவுக் கோட்டை சோழர்கள்" (தேவிக் கோட்டை சோழர்கள்) என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்கள்.
தீவுக்கோட்டை சோழர்கள், செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கருக்கு உற்ற தோழனாக விளங்கினார்கள். தீவுக்கோட்டை சோழர்களை ஒடுக்குவதற்கே, ரகுநாத நாயக்கர் அவர்கள் கர்நாடக பேரரசால் தஞ்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். தஞ்சைக்கு ரகுநாத நாயக்கன் வந்த காரணமே "தீவுக்கோட்டை சோழர்களை" ஒழிப்பதற்கே ஆகும். ரகுநாத நாயக்கன் தீவுக்கோட்டை சோழகனை போரில் வென்றான். அதன்பிறகு தஞ்சையை கைப்பற்றி ஆண்டுவந்தான். இதைப்பற்றி "சாஹித்ய ரத்னாகரம்" என்ற நூல் குறிப்பிடுகிறது. ரகுநாத நாயக்கருக்கு முன்னர் தஞ்சையை "சோழர்களே" ஆண்டுவந்தார்கள் என்பது அசைக்கமுடியாத வரலாறாகும்.
பீசப்பூர் என்னும் விசைப்புரச் சுலுத்தானின் படைகள் கி.பி. 1659 ஆம் ஆண்டு வல்லதின்மேற் சென்றபோது, விசயராகவ நாயக்கரும் அவர் படைஞரும் கோட்டையை விட்டுவிட்டு ஓடிப் போய் விட்டனர். அன்று வல்லத்தைக் கொள்ளையடித்துப் பெரும் பொருள் கவர்ந்த கள்வர், சுலுத்தான் படைகள் திரும்பியபின், தாம் கவர்ந்ததில் ஒரு பகுதியை விசயராகவ நாயக்கருக்கு மிளக் கொடுத்து விட்டனர். (மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்).
தீவுக் கோட்டை என்பது பிச்சாவரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிற்காலச் சோழர்களின் ஆட்சி முடிவுற்றதும், சோழ மன்னர்கள் தங்களது கோட்டையான "தேவிக் கோட்டைக்கு" பாதுகாப்பின் காரணமாக குடிப்பெயர்ந்திருக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரம் முற்றிலுமாக அழிந்த பிறகு சோழர்கள் தங்களது தலைநகரமாக "சிதம்பரத்தை" அமைத்துக் கொண்டார்கள் என்று இந்திய தொல்லியல் துறையின் அறிவிப்பு பலகை ஒன்று "கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில்" உள்ளது. பிச்சாவரம், சிதம்பரம், தீவுக்கோட்டை என்ற மூன்றுமே "சிதம்பரத்தை சார்ந்ததாகும்".
பிச்சாவரம் சோழ அரசர்கள், பிற்காலச் சோழ அரசர்களின் வழிவந்தவர்கள் என்ற காரணத்தினால் தான், சோழர்களின் குல தெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில் "திருமுடி சூட்டப்பெறுகிறது". இந்த முடிச்சூட்டு நிகழ்வைப்பற்றி, கூடல் மாநகர் (மதுரை) இருவாட்சிப் புலவரால் பாடப்பெற்ற "திருக்கைவளம்" என்ற வன்னியர் புகழ்பாடும், கி.பி. 18 ஆம் நூற்றாண்டு நூல் குறிப்பிடுகிறது.
தில்லை நடராஜர் கோயில் தீஷிதர்கள், பிச்சாவரம் சோழ அரசர்களை "சக்ரவர்த்தி" என்று குறிப்பிடுகிறார்கள். சோழர்களுக்கு மட்டுமே தில்லை வாழ் அந்தணர்கள் முடிசூட்டுவார்கள் என்பது வரலாறு. இன்று தங்களை சோழர்கள் என்று எவ்வித சான்றுகளும் இல்லாமல் பொய்சொல்பவர்கள், தில்லை கோயிலில் அக் காலத்தில் வெளியிலிருந்து முடிசூட்டு விழாவை வேடிக்கை பார்த்தவர்களின் வம்சத்தவர்கள் ஆவர்.

நன்றி: திரு முரளி நாயக்கர் 


நன்றி: திரு. ஆறு. அண்ணல் கண்டர்


ஊடகங்கள்  சோழ   மன்னர்களின் வாரிசுகளை 

பேட்டி எடுத்த காணொளிகள்









பிச்சாவரம் சோழர்களின் கல்வெட்டு


பிச்சாவரம் சோழர்களின் கல்வெட்டு

                                                                    இங்கு click செய்யவும்
                                               



                          ஆசியாவையே அரசாண்ட மன்னரினம் க்ஷத்ரியர்களாகவே 
                            இறுக்க முடியும் தமிழகத்தைப் பொறுத்தவரை வன்னிய 
                                             குலத்தினர் மட்டுமே க்ஷத்ரியர்கலாவர் 



                                         சோழ வம்சம் பற்றிய மேலும் விவரங்களுக்கு 
                                                           இங்கே click செய்யவும்




Wednesday 13 April 2016

                          

 பல்லவ வம்சாவளியினரான உடையார் பாளையத்தை ஆண்டவன்னிய உடையார்  பாளையக் காரர்களின்  வரலாறு‬


தமிழ்நாட்டில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளுள் உடையார் பாளையம் பாளையமும் ஒன்று. இதன் ஆட்சியாளர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று. பல்லவர்களின் வழித்தோன்றல்களான |பிரம்ம வன்னியகுல சத்திரியர்கள்,கங்கானுஜ பார்க்கவ கோத்திரம்]]"காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப் பெயருடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 30 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல் கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு உள்ளன. உ. வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட அறிஞர்களை உடையார் பாளையம் ஆட்சியாளர்கள் ஆதரித்தனர்.


ஜமீன்தார்கள் 





இவ்வூரிலுள்ள ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய பெயரையும் காலாட்கள் தோழ உடையாரென்னும் பட்டப்பெயரையும் உடையவர்கள். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சீபுரத்தில் பாளை யக்காரகளாக இருந்தவர்களாதலின் கச்சி என்னும் அடைமொழி இவர்க ளுடைய பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது. பல வீரர்களுக் குத் தலைவர்களாகி விஜயநகரத்தரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணை புரிந்து வந்தவர்களாதலின் "காலாட்கள் தோழ உடையார்" என்னும் பட்டப்பெயர் இவர்களுக்கு ஏற்பட்டது. இது காலாட் களுக்குத் தோழராகிய உடையாரென விரியும். இத்தொடர், "காலாக்கித் தோழ உடையார்" , "காலாக்கி தோழ உடையார்" எனப் பலவாறாக மருவி வழங்கும்.




பாளைய வரலாறு 


வடதமிழகத்தின் மிகப்பெரிய 'பாளையம்' உடையார் பாளையம். நாயக்க மன்னர்கள் பற்றிய வரலாறுகளில் உடையார் பாளையம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களை பிரம்ம சத்திரியர்கள் என்று விளந்தை கல்வெட்டு(கி.பி. 18ஆம் நூற்றாண்டு) கூறுகிறது.இவர்கள் வன்னிய மரபினர் மற்றும் பிச்சாவரம் சோழனாரின் சம்மந்திகள்.காஞ்சிபுரத்தை பல படையெடுப்புகளில் இருந்து காத்தவர்கள்.இதனைப் போற்றும் வகையில் காஞ்சி திரு வரதராஜப்பெருமாள் கோயிலில் இன்று வரை 'உடையார் பாளையம் உற்சவம்' கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்டசோழபுரம் திரு பிரகதீசுவரர் ஆலயம் சுமார் 400 ஆண்டுகளாக இவர்களது ஆளுகையில் இருந்து வந்தது. அக்கோயிலின் கோபுரக் கலசங்கள் மற்றும் சிங்கமுகக் கிணறு ஆகியவை உடையார் பாளையம் ஆட்சியர்களின் கொடையாகும். இவர்கள் பழைமையான கோயில்கள் பலவற்றை புதுப்பித்ததுடன் புதிய ஆலயங்களையும் எழுப்பியுள்ளனர்.

கங்கை கொண்ட சோழபுரம் 



பாளையக்காரர்கள்அரண்மனை‬





தமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் இருந்துவரும் ஒரே அரண்மனை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரண்மனை மட்டுமே. கி.பி.1500களின் தொடக்கத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அழகிய கலைநயமிக்க கட்டிடக்கலையுடன் கூடிய இந்த அரண்மனை 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனைச் சுற்றிலும் அகழி,கோட்டைச்சுவர் ஆகியவை கி.பி.1802 ஆண்டு வரை காணப்பட்டன. 64 அறைகள் இருந்த இந்த அரண்மனையில் 25 அறைகள் நன்றாக இருந்தன. சில அறைகள் தாஜ்மஹாலை போல் சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கின. அரண்மனையின் தர்பார் ஹால் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை போன்று காணப்பட்டன. இச்செய்திகள் திரு கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார்கள் காலத்தில் வெளியிடப்பட்ட 'உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்' நூலில் கூறப்பட்டுள்ளன. இவரது தந்தை திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில்(கிபி.1869-1918) இந்த அரண்மனை இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பழுதுப்பார்க்கப்பட்டது. பழைமையும்,பெருமையும் மிகுந்த இந்த அரண்மனை தமிழக அரசின் ஆதரவின்றி தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.














‪உடையார்பாளையம் கைலாசமஹால்‬


‪உடையார்பாளையம் கைலாசமஹால்‬
உடையார்பாளையம் 24-வது அரசரான திரு.கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார் கல்வியறிவும்,தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்.கி.பி.20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் அரசராக முடிசூட்டிக்கொண்டபின் அரண்மனையில் தர்பார் கூடியபோது அக்காலத்தில் வாழும் தெய்வமாக போற்றப்பட்ட கும்பகோணம் அருள்மிகு திரு சங்கராச்சாரியர் நேரில் வந்து அருளாசி வழங்கியிருக்கிறார். சுமார் 600 ஆண்டுகள் பழைமையான கலைநயமிக்க உடையார்பாளையம் அரண்மனை இவரது தந்தையார் திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. அரும்பெரும் செயல்கள் செய்த தனது தந்தையார் நினைவாக 'கைலாச மஹால்' என்னும் கோயிலை சின்ன நல்லப்பர் எழுப்பினார். அரியலூர் மழவராயரின் மகளான ஒப்பாயாள் என்பவரை மணந்துகொண்டார். சின்ன நல்லப்பர் காலத்தில் தான் 'உடையார்பாளையம் சமஸ்தானத்தின் வரலாறு' ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. உடையார்பாளையம் அரசர்கள் விளந்தையை ஆட்சி செய்த வன்னியர்களான வாண்டையார்களுக்கு  உறவினர்களாக விளங்கினார்கள் என்று கி.பி.18-ஆம் நூற்றாண்டின் விளந்தை கல்வெட்டு குறிப்பிடுகிறது.





உடையார் பாளையம் ஆவணப்படம் 


   



                        வன்னியகுல க்ஷத்ரியர்கள்


தென்னிந்திய ராசப்புத்திரர்களான வன்னியர்கள் தமிழக க்ஷத்ரிய குலத்தினராவர் இவர்கள்  பொதுவாக தமிழ்நாட்டில் வன்னியர் , படையாட்சி , வன்னியகவுண்டர் , வன்னிய நாயக்கர் , வன்னிய ரெட்டியார் 
  என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள்  தமிழகத்தினை ஆண்ட வன்னிய மன்னர்களான சேர , சோழ , பாண்டிய  மற்றும் பல்லவக் வம்சதினராவர். 

வன்னியர்களே சோழர்கள் என்பதற்கு ஆதாரமாய் பிச்சாவரம் சோழ அரசர்கள், சேரர் என்பதற்கு ஆதாரமாய் அரியலூர் மழவராயர்கள், பல்லவர்கள் என்பதற்கு ஆதாரமாய் காடவராயர், சம்புவராயர், உடையார் பாளையம் அரசர்கள், முகசா பரூர் கச்சிராய அரசர்கள். இந்த வரிசையில் பாண்டியர் என்பதற்கு ஆதாரமாய் சிவகிரி, அளகாபுரி, தென்மலை, ஏழாயிரம் பண்ணை, சமுசிகாபுரம் அரசர்கள் போன்றவர்கள் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.
இவர்கள் தமிழகத்தின் தொன்மையான போர்க்குடி மக்களாவர் .



இவர்கள் பல மாநிலங்களில் பலபெயருடன் ஆட்சி செய்தனர்.



வீர வன்னிய குல க்ஷத்ரியர்கள் சூரிய , சந்திர மற்றும் அக்னி வம்சத்தினர்.

இவர்கள் தமிழகத்தில் வன்னியகுல க்ஷத்ரியர்  எனவும் , ஆந்திராவில் அக்னிகுல க்ஷத்ரியர்எனவும் , கர்நாடகாவில் சம்பு குல க்ஷத்ரியர் எனவும் , கேரளாவில் பள்ளிக் குல க்ஷத்ரியர் எனவும் வட இந்தியாவில் சூர்யகுல ராசபுத்திரர்களாகவும் , சந்திரவம்ச ராசபுத்திரர்களாகவும் , தீப குல க்ஷத்ரியர்களாகவும் , நாக வம்ச க்ஷத்ரியர்களாகவும்  வாழ்கின்றனர்.